உள்ளூர் செய்திகள்

ஏ.எம்.யு.வில் ரேடியோதெரபி படிப்பு

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜே.என். மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (ரேடியோ தெரபி) பாடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பல்கலையின் கீழ், புதிய பாடப்பிரிவினை துவக்க இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளித்துள்ளது. ஆண்டொன்றுக்கு ஒரு மாணவரை மட்டுமே இப்படிப்பில் சேர்க்க அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் ரேடியோதெரபி துறையின் தலைவர் ஷாஹித் சித்திக் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம், இத்துறையை ஆய்வு செய்த பிறகே எம்.டி. ரேடியோதெரபி பாடத்தைத் துவக்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது என்றார். இதன் மூலம், ரேடியோ தெரபி பிரிவில் டிப்ளமோ படிப்புகளை வழங்கும் வாய்ப்பும் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்