விற்றுத் தீர்கின்றன விண்ணப்பங்கள்
பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், விநியோகிக்கத் துவங்கிய இரண்டாவது நாளின் முடிவிலேயே 1 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் மே 16ம் தேதிதான் துவங்கியது. சென்னையில் 5 மையங்கள் உட்பட தமிழகத்தில் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலை 3 மணிக்கே மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் வரிசையில் நிற்கத் துவங்கிவிடுகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் 1,10,443 விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதேப்போல, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேர கடந்த இரண்டு நாட்களில் 12,772 மாணவர்கள் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றுள்ளனர். செவிலியர் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெறலாம். மே 16ம் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.