உள்ளூர் செய்திகள்

தரச்சான்று பெற்ற பாடப்பிரிவுகள்

பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதியை வழங்குகிறது. இந்த இரண்டும் பெற்ற கல்லூரிகள் மட்டுமே இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இடம்பெறும். இதுதவிர தேசிய தர அங்கீகார போர்டும் (N.B.A.,) பாடப்பிரிவுகளுக்கு தர அங்கீகாரத்தை வழங்குகிறது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆண்டு கட்டணமாக 32,500 ரூபாயும், தர அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று பெற்ற பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள் பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் அதைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்