நிரம்பின முதல்வர் பணியிடங்கள்
சென்னை: ஆறு சட்டக் கல்லூரிகளில் காலியாக இருந்த முதல்வர் பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன. தமிழகத்தில், ஏழு அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2008ல், ஒரு கல்லூரியிலும், 2009ல், ஐந்து கல்லூரிகளிலும் முதல்வர் பணியிடம் காலியானது. இந்த ஆறு பணியிடங்களையும் நிரப்புவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆறு சட்டக் கல்லூரிகளிலும் முதல்வர் பணியிடம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு, ஜூன் 18 அன்று பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.