உள்ளூர் செய்திகள்

பி.இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் பணியிடங்கள்

பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பி.இ.சி.ஐ.எல்., நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் வரும் ஒரு மினி ரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ.,9001:2008 தரச் சான்று பெற்றது. இந்த நிறுவனம் ரேடியோ, "டிவி' தொடர்புடைய இன்ஜினியரிங் துறைகளில் கன்சல்டன்சி மற்றும் டர்ன்கீ சொல் யூஷன்களை வழங்குவதில் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுகள்:பி.இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் ஜூனியர் மானிட்டர் பிரிவில் 100 இடங்களும், சீனியர் மானிட்டர் பிரிவில் 10 இடங்களும், இவை தவிர கன்டென்ட் ஆடிட்டர், பி.ஏ.,/பி.எஸ்., ஸ்டெனோகிராபர் ஆகிய பிரிவுகளில் குறைவான அளவிலான காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. தேவை:ஜூனியர் மானிட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டரில் ஒரு நிமிடத்திற்கு குறைந்த பட்சம் 30 வார்த்தைகளை டைப் செய்யும் திறமை வேண்டும். மீடியா துறையில் குறைந்த பட்சம் ஒரு வருட கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சீனியர் மானிட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மீடியா அல்லது நியூஸ் ஏஜன்சி துறையில் குறைந்த பட்சம் இரண்டு வருட கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிற தகவல்கள்:பி.இ.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஜூனியர் மானிட்டராக தேர்வு செய்யப்பட்டால் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து ஐநூறு வரை கன்சாலிடேடட் தொகையாகப் பெறலாம். சீனியர் மானிட்டராக தேர்வு செய்யப்பட்டால் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 19 ஆயிரத்து ஐநூறு வரை கன்சாலிடேடட் தொகையாகப் பெறலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/க்கான டி.டி.,யை "Broadcast Engineering Consultants India Limited"  என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை நிரப்பி, சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம், சான்றிதழ் நகல்கள், டி.டி., போன்ற இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு 20.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தை இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். முகவரி:Monitoring Centre of Ministryof I & B,14-B Ring Road, I.P. Estate,New Delhi -110002. இணையதள முகவரி: www.becil.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்