ஐ.எஸ்.ஆர்.ஓ.,வில் சயின்டிஸ்ட்/இன்ஜினியரிங் பதவிகள்
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேசன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., நிறுவனம் வான் வெளி ஆராய்ச்சிக்காக உலகெங்கும் அறியப்படும் நிறுவனம். இன்று இந்தியாவிலிருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் இந்த நிறுவனத்தின் வெற்றியின் அடையாளம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சயின்டிஸ்ட் மற்றும் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுகள்:ஐ.எஸ்.ஆர்.ஓ., நிறுவனத்தின் சயின்டிஸ்ட் மற்றும் இன்ஜினியரிங் பணி இடங்கள் பிசிக்கல் ஓஷனோகிராபி, வாட்டர் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட், பாரஸ்ட்ரி, ஜியாலஜி மற்றும் ஜியோபிஸிக்ஸ் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. தேவைகள்:எந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கிறோமோ அதற்கேற்றபடி கல்வித் தகுதி தேவைப்படுகிறது. முது நிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருப்பது அவசியத் தேவையாக உள்ளது என்ற போதும் முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15.11.2011 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதர விபரங்கள்:ஐ.எஸ்.ஆர்.ஓ., வின் காலி இடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 31.10.2011ல் துவங்கும் ஆன்லைன் பதிவை 15.11.2011 வரை மட்டுமே செய்ய முடியும். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம், மதிப்பெண் சான்றுகளின் நகல் போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். முழு தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 30.11.2011க்குள் சென்றடைய வேண்டும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். முகவரி:Administrative Officer,Recruitment Section ( P & Ga),Building No.30-D,Space Applications Centre ( ISRO ),Ambawadi Vistar P.O,Ahmedabad - 380 015. ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 15.11.2011விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 30.11.2011 இணையதள முகவரி: www.isro.org/scripts/job.aspx