உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் தேர்வுக்குழுவில் கபில்தேவ்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில், மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. கபில்தேவ் கவர்னரின் பிரதிநிதியாக இடம் பெற்றுள்ளார். அரசுப் பிரதிநிதியாக அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் ராப்சன், சிண்டிகேட் பிரதிநிதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்பதவிக்கு மூன்று பேர் பெயர்களைப் பரிந்துரை செய்யும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்