எச்.ஐ.வி., மாணவன் வெளியேற்றம்!
மேற்கு வங்கத்தில், எச்.ஐ.வி., பாதித்த மாணவனை, பள்ளியில் இருந்து வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த மாநிலத்தின் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 1ம் வகுப்பு படித்த மாணவன், எச்.ஐ.பி., பாதிப்புக்கு ஆளாகியிருந்ததால், அவனை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. சக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பள்ளி நிர்வாகம், தன் மகனை வெளியேற்றிவிட்டது என, புலம்புகிறார் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய். அவரும் ஒரு, எச்.ஐ.வி., நோயாளியே. அரசு நிறுவனம் மூலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். ஜூனில் நிகழ்ந்த இச்சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது; இந்த நிகழ்வுக்கு முன், அந்த பள்ளியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.