ஆந்திரா; மாணவர்களுக்கு லேப்டாப்
உலக மாற்றுத்திறனாளி தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' மற்றும் சைக்கிள்களை, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், மாநிலத்தின் மூன்று இடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இல்லங்கள் கட்டப்படும். அதேபோல், பார்வையற்றவர்கள் மற்றும் மனநிலை பாதித்தவர்களுக்காக, நான்கு இடங்களில் சிறப்பு இல்லங்களும், மாற்றுத் திறனாளிகளுக்காக விளையாட்டு வளாகமும் கட்டப்படும், என்றார்.