பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் வரும் டிசம்பர் 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளைத் தவிர, அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் வரும் டிசம்பர் 13ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.