டி.என்.பி.எஸ்.சி..,உதவிப் பொறியாளர் தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி..,) சார்பில் 2011-2015ம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைத் துறையில், உதவிப் பொறியாளர் (கட்டிடவியல்) பதவியில் உள்ள 213 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 06.09.2015 அன்று நடைபெற்றது. மேலும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 424 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு தேர்வுபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in