உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். காட்டேரிக்குப்பம் பள்ளி தலைமையாசிரியர் திருமால் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் வினோத், ஐஸ்வர்யா நடுவர்களாக பங்கேற்று சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியகள் செய்திருந்தனர். காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கண்காட்சியை தலைமையாசிரியர் ஜெயபாலன் திறந்து வைத்தார். தலைமையாசிரியர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நாகதேவன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் சாந்தி, சைமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்