அஞ்சல்வழி கல்வி விண்ணப்பங்கள்
தேனி: ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலைய கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பழைய பதினோராம் வகுப்பு அல்லது தற்போதைய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 96881-50006, 97887-17556, 98424-24968 என்ற அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம்.