பேட்மின்டன் போட்டி துவக்கம்!
வால்பாறை: வால்பாறை கல்லுாரியில், பேட்மின்டன் விளையாட்டுபோட்டி துவங்கியது. வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், குடியரசு தினத்தையொட்டி, பேட்மின்டன் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. கல்லுாரி வளாகத்தில், போட்டியை முதல்வர் பழனிச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயராமன் துவக்கிவைத்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜபெருமாள் வரவேற்றார். ஒற்றையர் மற்றும் இரட்டையர்களுக்கான இந்த விளையாட்டு போட்டியில், மொத்தம் 17 அணிகள் விளையாடுகின்றன. இறுதிப்போட்டி வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை பரிசளிப்பு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.