பஞ்சாப் பல்கலை.,க்கு நிதியுதவி
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பார்மசி பிரிவுக்கு யு.ஜி.சி., நிதியுதவி வழங்கியுள்ளது. சண்டிகரில் அமைந்துள்ளது பஞ்சாப் பல்கலைக்கழகம். இங்கு பார்மசூட்டிக்கல் படிப்புக்கான பிரத்யேகமாக அமைந்துள்ள ‘யுனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசூட்டிக்கல் சயின்சஸ்’ பிரிவுக்கு யு.ஜி.சி., ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளது. ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணிகளுக்காக இந்த நிதியை யு.ஜி.சி., ஒதுக்கியுள்ளது. தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தொகையை பஞ்சாப் பல்கலைக்கழகம் தற்போது கோரிப்பெற்றுள்ளது. முதல் கட்டமாக இரண்டரை கோடி ரூபாயை பல்கலைக்கழகத்துக்கு யு.ஜி.சி., வழங்கியுள்ளது.