‘மோமோ’ எனும் ஆபத்து!
‘மோமோ சேலஜ்’ எனும் ஆன்லைன் விளையாட்டில் பங்கெடுக்க தூண்டும் வகையில், ‘வாட்ஸ் ஆப்’பில் வலம் வரும் அழைப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்குமாறு, இந்தியன் சர்டிபிகேட் ஆப் செக்ண்ட்ரி எஜுகேஷன் (ஐ.சி.எஸ்.இ.,) வாரியம், பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது! மொபைல் மற்றும் ஆன்லைன் வாயிலாக விளையாடப்படும் ‘புளூவேல்’ எனும் ஆபத்துமிக்க விளையாட்டு சில காலங்களுக்கு முன்பு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபகாலமாக, ‘மோமோ’ எனும் மற்றொரு அபாயகரமான விளையாட்டு பரவலாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகள் விலகி இருக்கும் வகையில், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தியுள்ள ஐ.சி.எஸ்.இ., வாரியம் பள்ளிகளில் வகுப்பு நேரத்திற்கு முன்பு நடைபெறும் வழிபாட்டு கூட்டங்கள் வாயிலாகவும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்த உத்தரவிட்டுள்ளது.