உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி

திருப்பூர்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, &'நிஷ்தா&' ஆன்லைன் பயிற்சி வரும் 16ம் தேதி துவங்குகிறது.டிஜிட்டல் முறையிலான கற்பித்தலை, அரசுப்பள்ளி வகுப்பறைகளுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், ஆசிரியர்களுக்கான, &'நிஷ்தா&' (தேசிய அளவில் கல்வி முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு) பயிற்சி, கடந்தாண்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டிற்கான, &'நிஷ்தா&' பயிற்சி குறித்து, அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன., 15, 2021 வரை நடக்கும் பயிற்சியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கலாம். அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடநெறிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், &'கோவிட்-19&' சூழ்நிலையில், பள்ளி கல்வித்துறை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றிய பாடநெறியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.வட்டார அளவில், டெலிகிராம் செயலி மூலம், ஆசிரியர்களை இணைத்து, குரூப் உருவாக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பயிற்சி அளிக்கின்றனர். ஆசிரியர் பயிற்றுனர்கள், பயிற்சிகளை வீடியோக்களாக, செயலியில் பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்