உள்ளூர் செய்திகள்

போட்டித் தேர்வு பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மீனவ சமுதாய பட்டதாரிகள்இந்திய குடிமைப்பணியில் சேர்வதற்கானபோட்டித் தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிக்கான போட்டி தேர்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து &'மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், திண்டுக்கல்&' முகவரில் நேரிலோ, தபாலிலோ பிப்.19க்குள் அனுப்பலாம். விவரங்களுக்கு 0451-290 0148ல் பேசலாம் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்