உள்ளூர் செய்திகள்

தொழிற்கல்வியில் பின்தங்கும் கிராமப்புறங்கள்

இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 20 சதவீதம் மட்டுமே தொழிற்கல்வியை பயிற்றுவிக்கும் கல்விநிறுவனங்கள் உள்ளன. ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்தான் வசித்து வருகின்றனர். நகர் மற்றும் கிராமப்புறங்களில் சமஅளவு கல்வி நிறுவனங்கள் இருந்தால் மட்டுமே ஒரு நாடு சீரிய வளர்ச்சி பெற முடியும். நமது இந்தியாவில் பொதுக்கல்வியை போதிக்கும் கல்லூரிகள் ஐந்தில் ஒரு பகுதி தான் நகர்புறங்களில் இருக்கின்றன. ஆனால் தொழிற்கல்வியை போதிக்கும் 80 சதவீத கல்லூரிகள் நகர்புறங்களில் இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கிராமப்புறங்களில் அதிக அளவில் தொழிற்கல்வி நிறுவனங்கள் தொடங்கவும், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் உயர் கல்வி கற்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கிராமப்புறங்களில் உயர்கல்வி நிறுவனங்களை தொடங்க, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மத்திய அரசு ‘பல்கலைக்கழக மானியக்குழுவும்’(யு.ஜி.சி.,) பின்தங்கிய பகுதிகளில் தொழிற்கல்வி நிறுவனங்களை தொடங்க பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்