உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு டி.சி.,யுடன் மரக்கன்று

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரசு பள்ளி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழுடன் (டி.சி.,) மரக்கன்றுகளை வழங்கி, பசுமை திட்டம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.1994 ல் தனுஷ்கோடியில் அரசு நடுநிலைபள்ளி உருவாகி, துவக்கத்தில் 20 குழந்தைகள் பயின்றனர். 1998 ல் நடுநிலைபள்ளி ஆனதும் தற்போது 65 மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்வியாண்டில் 8 ம் வகுப்பு படித்த 6 மாணவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ஜெயசெல்வி மாற்று சான்றிதழ் வழங்கினார். இத்துடன், ஆண்டுதோறும் உப்பு காற்று வீசும் தனுஷ்கோடியில் வீடு தோறும் மரக்கன்றுகள் நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்திட மாணவர்கள், பெற்றோரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆசிரியர்கள் மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்