உள்ளூர் செய்திகள்

சர்வதேச கராத்தே போட்டி

ஏழு நாடுகளைச் சேர்ந்த 2500 மாணவர்கள் வயது மற்றும் எடை வாரியாக கலந்து கொண்டனர். தமிழக அணியில் மதுரை ஜி தொக்குக்காய் கராத்தே பள்ளியின் 6 மாணவர்கள் இடம் பெற்று 8 பதக்கங்களை வென்றனர். 9 வயது கட்டா மற்றும் சண்டை பிரிவில் மகாத்மா பள்ளி அபிநாவ் சிதம்பரம் வெண்கலம் வென்றார். 12 வயது கட்டா பிரிவில் கஸ்துரிபாய் பள்ளி ஜீவிதா வெள்ளி, 13 வயது பிரிவில் குளோபல் சர்வதேச பள்ளி ஆதில் வெண்கலம், 14 வயது பிரிவில் டான்பாஸ்கோ பள்ளி ரோஹித் தங்கம், சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றனர். 15 வயது 50 கிலோ சண்டை பிரிவில் அன்னை வேளாங்கன்னி பள்ளி யோகேஸ்வரன், 16 வயது 76 கிலோ எடை சண்டை பிரிவில் செயின்ட் மைக்கேல் பள்ளி தீபக் நாராயணன் வெண்கல பதக்கம் வென்றனர். ஜி தொக்குக்காய் அகில இந்திய தலைவர் தியாகராஜன், பொது செயலாளர் முத்துராஜு, பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்