மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்!
சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் வரையிலும், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் 15 சதவீதம் வரையிலும், சுயநிதி கலைக் கல்லூரிகளில் 10 சதவீதம் வரையிலும் மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம். வரும் 30 ம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.