புதிய நுாலகம் திறப்பு
ஊட்டி: ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுாலக திறப்பு விழா நடந்தது.மாவட்ட நீதிபதி அப்துல்காதர் நுாலகத்தை திறந்து வைத்து பேசுகையில், இந்த நுாலகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை முதல் மாலை வரை செயல்படும். அனைவரும் இந்த நூலகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.