உள்ளூர் செய்திகள்

முதுநிலை பிரிவு துவங்கப்படுமா?

சென்னை: பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில் முதுநிலை பிரிவு துவங்கப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி 2016ல் துவக்கப்பட்டது. தென்சென்னையில், அரசு கல்லுாரியாக இருப்பதால், ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இங்கு தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணித பயன்பாட்டியல், இயற்பியல், வேதியியல் போன்ற இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால், முதுநிலை பாடப்பிரிவுகள் துவங்காததால், மாணவ - மாணவியர், தனியார் கல்லுாரியை நாட வேண்டி உள்ளது. இவர்கள் புறநகரில் உள்ள தனியார் கல்லுாரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணம் செலுத்த முடியாமல் படிப்பில் ஆர்வமுடைய மாணவ - மாணவியருக்கு ஆராய்ச்சி மேல்படிப்பு படிக்க முடியவில்லை. கல்லுாரி துவங்கி ஏழு ஆண்டுகள் ஆகியும் தரத்தை மேம்படுத்தவில்லை. ஏழை, நடுத்தர மாணவ - மாணவியர் நலன்கருதி, முதுநிலை பாடப்பிரிவுகள் துவங்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்