உள்ளூர் செய்திகள்

கல்லுாரியில் சேர அவகாசம்

திருப்பூர்: இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25ல் துவங்கி, ஆக., இரண்டாவது வாரம் நிறைவடைந்தது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவர்கள் சேர இம்மாதம், 11ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கவுன்சிலிங்கில் திருப்பூரை தேர்வு செய்த, 70க்கும் மேற்பட்டோர், இதுவரை இணைந்து விட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து விண்ணப்பித்தவர் உட்பட, ஓரிருவர் இன்னமும் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும், என பெற்றோர் கோரிக்கை விடுத்ததால், மருத்துவ மாணவர்கள் கல்லுாரியில் இணைவதற்கான அவகாசத்தை இன்று (14ம் தேதி) மாலை வரை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. செப்., 1 முதலாம் ஆண்டு வகுப்புகள் செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்