எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 242 வது எழுத்தாளர் சந்திப்புகூட்டம் பென்னிங்டன் நூலக கலையரங்கில் நடந்தது.தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். மோகன் கந்தசாமி இசை பாடல்கள் பாடினார். எழுத்தாளர் சந்திரசேகர் வரவேற்றார். பேராசிரியர் சிவனேசன், புலவர் வெள்ளை, எழுத்தாளர்கள் சிவனனைந்த பெருமாள், அன்னக்கொடி ஆகியோர் பேசினர். கவிஞர் புகழேந்தி ஏற்புரையாற்றினார்.கவிஞர் பலராமன் நினைவேந்தல் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறை நூலகத்திற்குஎழுத்தாளர் கோதண்டம் புத்தகங்கள் வழங்கினார். விழாவில் எழுத்தாளர் சாந்தி உட்பட பல்வேறு எழுத்தாளர்கள், பங்கேற்றனர். எத்திராஜ் நன்றி கூறினார்.