தொலைதுார படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை: பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி கூடத்தில் வழங்கப்படும் 11 இளநிலை, முதுநிலை பாடங்களுக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம், இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி கூடத்தில், 11 இளநிலை, முதுநிலை பாடங்கள் கையாளப்படுகின்றன. பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.காம்., ஆகிய மூன்று இளநிலை படிப்புகளுக்கும், எம்.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., வணிகவியல், நிதி மற்றும் கணக்கியல், எம்.ஏ., தொழில் வழிகாட்டுதல், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கும், இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தொலைதுார கல்வியில் பட்டம் பெற விரும்புவோர், http://sde.b-u.ac.in/SSS/OLP என்ற இணையதளத்தை பார்வையிட்டு, கூடுதல் தகவல் பெறலாம்.