விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: தோட்டக்கலைத்துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகள் குறித்து மாவட்ட அளவிலான நிபுணர் குழு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.விருதுக்கு மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.10ஆயிரம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் செப். 30க்குள் www.tnhorticulture.tn.gov.in என்ற துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்ததை அணுகி விண்ணப்பிக்கலாம் என தோட்டகலை அதிகாரிகள் தெரிவித்தனர்.