உள்ளூர் செய்திகள்

மாநகராட்சியில் அறிவியல் கண்காட்சி

சென்னை: முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே, அறிவியல் மற்றும் அண்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திரயான் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியை, மேயர் பிரியா துவக்கி வைத்தார்.அறிவியலாளர்களின் சாதனைகள், விண்வெளி சார்ந்த விளக்கங்களை எடுத்துரைக்கும் வகையில், விடுமுறை நாட்கள் உட்பட நவ., 14ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.தினமும் காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதில், வானவியல் குறித்து காலை நான்கு நிகழ்வாகவும், மாலை நான்கு நிகழ்வாகவும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வான்நோக்கி வாயிலாக வான் செயல்களை பார்வையிடுவதுடன், அதுகுறித்த விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.நிகழ்வில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்