மாணவர்களுக்கு பேச்சு போட்டி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, பேச்சு போட்டி நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, வரும் 31ம் தேதியும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, வரும் நவ., 15ம் தேதியும், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, தனித்தனியாக பேச்சு போட்டிகள் நடக்கின்றன.கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிக்கு, கல்லுாரிக்கு இரண்டு பேர் தேர்வு வீதம், அந்தந்த கல்லுாரிகளின் முதல்வரே தேர்வு செய்து அனுப்ப வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிக்கு, தலைமையாசிரியர்களே பள்ளிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.