உள்ளூர் செய்திகள்

கூடுதல் தகுதிக்கு ஊக்கத்தொகை

அரசு பணியாளர்கள் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை, மத்திய அரசின் வழிகாட்டு முறைகளின்படி, விரைவில் அறிவிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்திருந்தார்.அதன்படி, பிஎச்.டி., படிப்புக்கு 25,000 முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்புக்கு, 20,000 இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்