உள்ளூர் செய்திகள்

பிரான்சில் தீபாவளி கொண்டாட்டம்

பிரான்சு: பிரான்சிலுள்ள ஒல்னே-சுபாவில் ஒல்னே இந்திய சங்கத்தின் சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஒல்னே நகர மேயர் புருனோ பெசிசா, இந்திய தூதரகம் சார்பாக செயலர் பிரவீன் குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவின் துவக்கத்தில் இந்திய கலாச்சாரப்படி குத்து விளக்கு ஏற்றப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து, ஒல்னே இந்திய சங்கத்தின் தலைவர் இராஜன் வரவேற்பரை ஆற்றினார். ஒல்னே நகர மேயர் மற்றும் இந்திய தூதரக செயலர் சிறப்புரையாற்றினர். கலந்துக்கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், வர்த்தக கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பல்வேறு பிரான்சு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர். விழாவின் முடிவில் ஒல்னே இந்திய அமைப்பின் செயலாளர் பாலா வாசு, துணை தலைவர் குமார் ஆகியோர் நன்றி கூறினர். விழா ஏற்பாடுகளை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்