ஆடு வளர்க்க பயிற்சி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் ஆடு வளர்ப்பு, தொழில் முனைவோர் சிறப்பு பயிற்சி முகாம் டிச.,21ல் நடக்கிறது.தேசிய கால்நடை இயக்கம், தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை சார்பில் 50 சதவீத மானியத்திற்கான இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 0452 - 248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என மையத் தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.