பயிற்சி வகுப்பு துவக்கம்
திருப்புத்துார்: தமிழ்நாடு அரசின் இலவச திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்புத்துார் புதுக்காட்டாம்பூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லுாரியில் அசிஸ்டன்ட் செப் இலவச திறன் பயிற்சிக்கான புதிய வகுப்பு துவக்கப்பட்டது.கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். திருப்புத்துார் சமுதாய கல்லுாரி முதல்வர் சுரேஷ் பிரபாகரன் பயிற்சி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கினார். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மாணிக்க நாச்சியார், சரவணன், பொன்முத்து ஒருங்கிணைத்தனர்.