புத்தகக் கண்காட்சி நிறைவு
திருநகர்: மதுரை திருநகரில் மக்கள் மன்றம் சார்பில் 10 நாட்கள் நடந்த புத்தகக்கண்காட்சி நிறைவடைந்தது.விழாவுக்கு மன்றத்தலைவர் செல்லா தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சவிதா பள்ளி சீரமைப்புக் குழு தலைவர் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் நாகராசன் வரவேற்றார்.கல்வி அலுவலர் சாயிசுப்புலட்சுமி, எழுத்தாளர்சேவியர் ப்ரீஸ் ஒய்ட் எழுதிய மனதைத் துாக்கி மாற்றிப் போடு நுாலை வெளியிட, சமூகஆர்வலர் சண்முகசுந்தரம் பெற்றார். திருநகர் ஜெயன்ட்ஸ் குரூப், தி.மு.க., கவுன்சிலர் இந்திராகாந்தி ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பத்து அரசுப் பள்ளிகளுக்கு வழங்கினர்.பேராசிரியர் ஆனந்தகுமார் இலக்கியத்தில் வேளாண்மை, தொல்லியல் ஆர்வலர் ஆசைத்தம்பி தமிழக தொல்லியல் ஆய்வுகளில் புதிய வெளிச்சங்கள் என்ற தலைப்பில் பேசினர். ஏற்பாடுகளை திருநகர் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், ஜெயன்ட்ஸ் குரூப், நடைப்பயிற்சி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.