உள்ளூர் செய்திகள்

பணியிடத்தில் பாதுகாப்பு கருத்தரங்கு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் சார்பில், பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில், வழக்கறிஞர் கோதனவள்ளி பங்கேற்று பேசினார். பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உடல் மற்றும் மனரீதியான நெருக்கடிகள், வன்கொடுமை தீர்வு சட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு சார்ந்த சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பல்கலை மாணவர் நல மையத்தின் முதல்வர் மரகதம், இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியம், சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் பரணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்