உள்ளூர் செய்திகள்

தகுதியான தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுத விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் இன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும், 2024 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு தகுதியான தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் தற்போது பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.தகுதியானவர்கள் இன்று முதல் ஜன., 10ம் தேதி வரை, அரசுத்தேர்வுகள் இயக்கக சேவை மையத்தில், உரிய கட்டணத்தை செலுத்தி, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தனித் தேர்வர்களுக்கான தகுதி, பொதுவான அறிவுரை மற்றும் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் விபரம், பதிவு செய்வது எப்படி என்ற விவரம் www.dge.tn.gov.in என்ற தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்