உள்ளூர் செய்திகள்

பர்மிங்காம் பல்கலை உதவித்தொகை

அறிமுகம்நூற்றாண்டிற்கும் மேலாக செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகம், 10 நோபல் வெற்றியாளர்களை இதுவரை உருவாக்கியுள்ளது. பர்மிங்காம் பல்கலைக்கழகம், முதுநிலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு பலவிதமான உதவித்தொகைகளை வழங்குகிறது. வரும் 2024ம் ஆண்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, அவுண்ட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் ஸ்காலர்ஷிப், இந்தியா சான்சலர் ஸ்காலர்ஷிப், குளோபல் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப் உட்பட பல்வேறு திட்டங்களில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.மாணவர்கள், நிதி பற்றி கவலைப்படாமல், படிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதற்காக, மொத்தம் 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள உதவித்தொகைகளை வழங்குகிறது. அவற்றில் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் அதாவது 10.5 கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகைகளை பெறலாம்.அதன்படி, * முதுநிலை படிப்புகளுக்கான விருது * பர்மிங்காம் முதுநிலை உதவித்தொகை* ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ் முதுநிலை உதவித்தொகை* குளோபல் முதுநிலை உதவித்தொகை* பர்மிங்காம் பிசினஸ் ஸ்கூல் உதவித்தொகை* கலை மற்றும் சட்டக் கல்லூரி முதுநிலை உதவித்தொகை * கெமிக்கல் இன்ஜினியரிங் நுழைவு உதவித்தொகை * 125ம் ஆண்டு பிளேக் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை* ஆராய்ச்சி குழு நிதி உதவி* முதுநிலை பட்ட ஆராய்ச்சி* என்.இ.ஆர்.சி., - சி.என்.டி.ஏ.,* கலை மற்றும் சட்டக் கல்லூரி ஆராய்ச்சி உதவித்தொகைவிண்ணப்பிக்கும் முறை:உதவித்தொகை திட்டம் மற்றும் படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். ஒவ்வொரு உதவித்தொகை திட்டத்திற்கும் கல்வியில் சிறந்த மற்றும் இதர தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தேதி உதவித்தொகை திட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். எனினும், பெரும்பாலான முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31, 2024விபரங்களுக்கு: www.birmingham.ac.uk/study/postgraduate


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்