அறிவு வளர்க்கும் புத்தகத்திருவிழா
ராமநாதபுரம்: வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தகம் வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும், என்றார் நெல்சன் மண்டேலா தான் துாக்கிலிப்படுவதற்கு முன்பு வரை புத்தகத்தை வாசித்துக்கொண்டே இருந்தார் பகத்சிங்.புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து ராஜா பள்ளி மைதானத்தில் 6வது புத்தக திருவிழா நடக்கிறது. பிப்.12 வரை காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.ரூ.10 கோடி இலக்குடாக்டர் வான்தமிழ் இளம்பரிதி, செயலாளர் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம்: 110 அரங்குகளில் 69 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் உள்ளன. மின் நுாலகம், ராமநாதபுரம் வரலாறு அரங்கம்,ஓவியகண்காட்சி, பயிற்சி பட்டறை, கோளரங்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்தாண்டு ரூ.6 கோடியே 20 லட்சதிற்கு புத்தகங்கள் விற்றது. இந்தாண்டு ரூ.10 கோடிக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.