உள்ளூர் செய்திகள்

ஓவிய காட்சிக்கூடம் திறப்பு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா நுண்கலைத்துறை சார்பில், ஓவிய காட்சி கூட திறப்பு விழா நடந்தது. விழாவில் ஒருங்கிணைந்த நுண்கலைத்துறை தலைவர் செந்தமிழ்பாவை வரவேற்றார். அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி ஓவிய காட்சி கூடத்தை திறந்து வைத்தார். காட்சிக்கூடத்தில், மாணவர்களின் கை வண்ணத்தில் உருவான 200க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. இதில் பல்கலை ஆட்சி குழு உறுப்பினர்கள் குணசேகரன் சுவாமிநாதன், பழனிச்சாமி, ராசாராம், தனுஷ்கோடி கலந்து கொண்டனர். ஓவியக் கண்காட்சிக்கூடம் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்