ஸ்வீடனில் உயர்கல்வி
புதுமையான அனுபவம், தனித்துவமான மற்றும் வளமான கல்வி அனுபவத்தை, சர்வதேச மாணவர்களுக்கு ஸ்வீடன் நாட்டு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.உயர்கல்வி முறை: ஸ்வீடனில் இரண்டு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியிலும், பல்கலைக்கழக கல்லூரிகள் பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்முறை கல்வியிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. சிறந்த பல்கலைக்கழகங்கள்:லண்ட் பல்கலைக்கழகம் - ஆராய்ச்சி மற்றும் வலுவான சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் பெயர் பெற்றது.உப்சாலா பல்கலைக்கழகம் - ஸ்வீடனில் உள்ள பழமையான இந்த பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.கே.டி.எச்., ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு புகழ்பெற்றது.ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் - வலுவான ஆராய்ச்சியுடன், பலதரப்பட்ட துறை படிப்புகளை வழங்குகிறது.விண்ணப்பிக்கும் முறை:Studyinsweden.se மற்றும் Universityadmissions.se போன்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் படிப்புற்கு ஏற்ப கல்வித்தகுதியுடன், ஆங்கில மொழிப்புலமை பரிசோதனை தேர்வுகளான டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., மதிப்பெண்களும் தேவைப்படுகிறது.உதவித்தொகை: சர்வதேச மாணவர்களுக்கு ஸ்வீடிஷ் இன்ஸ்டிடியூட் உதவித்தொகை, பல்கலைக்கழகம் சார்ந்த உதவித்தொகை மற்றும் ஐரோப்பிய மாணவர்களுக்கு எராஸ்முஸ் போன்ற பல உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.செலவினங்கள்: நகரம் மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து சுமார் 900 முதல் 1,300 அமெரிக்க டாலர் வரை மாதாந்திர செலவீனங்களுக்கு தேவைப்படும். இதனை ஈடுகட்ட, சர்வதேச மாணவர்கள் படிக்கும் போதே, பகுதி நேரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.மொழி: பெரும்பாலான ஸ்வீடன் நாட்டினர் ஆங்கிலம் பேசுகின்றனர். எனினும், ஸ்வீடிஷ் மொழியைக் கற்றுக்கொள்வது சிறந்த அனுபவத்தையும், வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்தும்.விபரங்களுக்கு: studyinsweden.se