பி.என்.ஒய்.எஸ்., அட்மிஷன்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையம், 2024 - 2025ம் கல்வியோண்டிற்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.படிப்பு: பி.என்.ஒய்.எஸ்., - யோகா மற்றும் இயற்கை மருத்துவம்சேர்க்கை இடங்கள்: அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள். தகுதிகள்: பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். 'நீட்' தேர்வு மதிப்பெண் அவசியமில்லை.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப்படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106 எனும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.குறிப்பு: அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 8விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/