கல்வி ஆலோசனையிலும் ஏ.ஐ.,
85 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் உயர்கல்வி குறித்த ஆலோசனைகளுக்கு சாட்ஜிபிடி போன்ற 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' உபகரணங்களை பயன்படுத்துகின்றனர் என்றும், அவர்களில் குறைந்தது 40 சதவீதம் பேர் கல்வி ஆலோசகர்களின் ஆலோசனையை பெறவில்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.இந்த ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான 2,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கல்வி ஆலோசகர்களிம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 62 சதவீத கல்வி ஆலோசகர்கள் தங்கள் பணியில் ஏ.ஐ., கருவிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆலோசனை நடைமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்தை வழிநடத்துவதற்கு தேவையான அவசியமான தரவுகளை ஏ.ஐ., வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.