உள்ளூர் செய்திகள்

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்கான தற்காலிக தேர்ச்சி சான்றிதழ் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது தற்காலிக சான்றிதழ்களை வரும் 19ம் தேதி பிற்பகல் 2.00 மணி முதல் ஆன்லைனில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் முறைதங்களது விடைத்தாள்களை பார்வையிட விரும்பும் மாணவர்கள், வரும் 20ம் தேதி காலை 11.00 மணி முதல் மே 24 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்குமான விடைத்தாள் நகலுக்கு ரூ. 275 கட்டணம் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்பட வேண்டும்விடைத்தாள் நகலை பெற்ற மாணவர்கள் மற்கூட்டல்/மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் தகவல்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்