விறு விறு விண்ணப்பப்பதிவு
சென்னை: தமிழக பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மே 7ம் தேதி துவங்கியது. நேற்று மாலை வரை, 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 53,624 மாணவர்கள், 48,514 மாணவியர் என 1.02 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில், ஜூன் 6ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.