உள்ளூர் செய்திகள்

மூவர்ண கொடி பேரணி

ஷிவமொக்கா: மூவர்ண கொடி பேரணியில் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே தேசிய கொடியை ஏந்தி சென்றது, இளம் தலைமுறையினரிடம் உள்ள தேசபக்தியை எடுத்து காட்டியது.ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி மற்றும் ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், மூவர்ண கொடி பேரணி பல மாவட்டங்களில் நடந்து வருகிறது.நேற்று ஷிவமொக்காவில் 1 கி.மீ., துாரத்திற்கும் அதிகமான 700 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடியை மாணவ - மாணவியர், முன்னாள் ராணுவ வீரர்கள், பொது மக்கள் என பலர் ஏந்தி சென்றனர்.பேரணி துவங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. இதை பொருட்படுத்தாமல் அனைவரும் நனைந்தபடியே தேசிய கொடியை பிடித்து சென்றனர்.இது பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இளம் தலைமுறையினர், மாணவர்களிடம் உள்ள தேச பக்தியை எடுத்து காண்பித்தது. மழையில் நனைந்தபடி மாணவியர், தேசிய கொடியை சுமந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்