உள்ளூர் செய்திகள்

கேரள பள்ளிகளில் உதவிப்பெட்டி

ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழாவில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையும், சித்தியும் அடித்து துன்புறுத்திய சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, வீடுகளில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுக் க, சுரக் ஷா மித்ரம் என்ற பெயரில் விரிவான செயல் திட்டத்தை அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி அறிவித்தார். அவர் கூறியதாவது:கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி வைக்கப்படும். அதில், மாணவ - மாணவியர் தங்களுக்குரிய பிரச்னைகளை எழுதி போடலாம்.வாரத்திற்கு ஒரு முறையேனும், உதவிப்பெட்டியை பள்ளி தலைமையாசிரியர் திறந்து பார்க்க வேண்டும். புகார்கள் வந்திருந்தால், அந்த தகவலை கல்வித் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்