உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடில்லி: துவாரகா பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று காலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும், போலீஸ் சோதனையில் எவ்வித குண்டுகளும் கைப்பற்றப்படவில்லை.டில்லி தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை, 7:05 மணிக்கு, துவாரகா பகுதியில் உள்ள மாக்ஸ்போர்டு பள்ளியில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக, மிரட்டல் போன் வந்தது.அதையடுத்து, அந்த பள்ளிக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் போலீசார், செக்டார் 7 ல் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடத்தினர்.எனினும், எவ்வித வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. தொடர்ந்து இதுபோல நடப்பதால், பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்