போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி
கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஜூலை முதல் பயிற்சி வகுப்புகள், துறை வல்லுனர்கள் உதவியுடன் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்காக, 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி செய்யப்பட்டுள்ளது.பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், https://tamilnaducareerservices. tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து, போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆர்வமுள்ளவர்கள்,கோவை மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 93615 76081 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.