உள்ளூர் செய்திகள்

மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருணாச்சலம் வரவேற்றார். பேராசிரியர் ஜெயந்தி நோக்கவுரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரியபுத்திரன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வள பயிற்சியாளர் அபிராமி சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் கிரிஜா, சுவாமிநாதன், முகமது உசேன், சதீஷ்குமார், ஆசிரியர் கோவிந்தராஜ் கருத்துரை வழங்கினர்.வட்டார வள பயிற்றுநர்கள் யமுனாராணி, இந்துமதி, பாலின வள மேலாளர் சுமதி மற்றும் சங்கீதா, ரேவதி, கிரிஷ்வர், ராசு, விஜயலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்